பப்பு பாடல்-6

தங்கத் தூரி
என் பப்பு தூரி -ஆரிராரி
என் அழகு தூரி

ஆரிராரிராரிராரிராரிராரிராரோ
ஆரிராரிராரிராரிராரிராரிராரோ

காணும் கனவுகள் யாவும்
நாளை உனதடா - அதை
எண்ணி எண்ணி நாளும்
போகும் கண்ணே உறங்கடா!
ஏழுமலை ஏழுகடல்
மனம் தாவுதடா - ஏழ்மையிலும்
ஏதோ சுகம் கூடுதடா

(ஆரி..)

வானம் ஒரு எல்லை
ஆனால் உனக்கது இல்ல
தோல்வி எனும் சொல்ல
நாவும் சொன்னதில்ல
மோகச் சிறகினில் வானில்
ஏறி வெள்ளி முளைக்குதோ
அட ஓடும் மேகம்
உனக்கென்ன பயமிருக்குதோ
நடுவானில் முழு நிலா விளக்கடா
நடுக்கங்கள் உனக்கென்ன
கண்ணே உறங்கடா!

(ஆரி..)

குயில் சத்தம் கேட்க
மனமெங்கோ பறக்குதா
குட்டி போட்ட மான்களாட்டம்
கால்கள் நடக்குதா
தேகம் தீண்டும் தென்றல்
சன்னல் திறக்குதா
தீர்ந்து போன இரவுகள்
கண்ணை திறக்குதா

(தங்கத் தூரி)

கன்னம் ரெண்டுமோத
சண்டை ஒன்னு வேணும்
சமரசம் செய்ய
முத்தம் ஒன்னு வேணும்
காயம் பட்ட காலம்
மாறும் மாயமென்ன
உன் கைகள் கோர்த்து
நானும் போகும் தூரமென்ன
துரத்தியே பிடித்திடு
வானம் என்ன
தூறல் நின்ன பின்னும்
வீசுதடி மழைச்
சாரல் என்னை

(தங்கத் தூரி)

எழுதியவர் : பப்பு பாடல்கள் (12-Mar-22, 1:31 am)
சேர்த்தது : Pappu Padalgal
பார்வை : 43

மேலே