ஒரு பேட்டி

பெண்ணே....
வருகிறாயா? சந்தோஷம்.
வசந்தங்கள் மலரும்.
வரவில்லையா? மனவருத்தமில்லை
வாட்டங்களுமில்லை.
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
இருந்தது. ஆனால்
உங்களால் ஏலம் விடப்பட்டதால்
அது விற்பனையாகிப்போனது.
எங்களைப்போல் "கற்பு" உங்களுக்கில்லையா?
இருக்கின்றது.ஆனால்
நாங்கள் அதோடு இருந்துவிட்டால்
நீங்கள் வேறுபேர் இட்டு கூப்பிட்டுவிடுகிறீர்களே.
எங்களினங்களை கற்பழிக்கும்போது மிருகங்களைவிட
கீழ்தரமாகிவிடுகிறீர்களே?
ஆம். என்ன செய்வது?
பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிய கதைதான்.
சிலசமயம் அப்பாவி
பெண்கள் கெடுக்கப்படும்போது
எங்களுக்கும் வருத்தமுண்டு.
தண்டனைகளையும் ஏற்கத்தயார்.
மலருக்கு மலர் தாவும் இனம் உங்களினம்...
உண்மைதான். அது இயற்கையின் சாபம்.
மலர்களை ரசிப்பது பாவமா?
காதலிப்பவளை கைவிடுவதில் உங்களுக்கு நிகர்
நீங்களேதான் ...மறுக்கமுடியுமா?
முடியும்.பாவங்கள் யார்மீதானாலும்
பழிகள் என்னவோ எங்கள் மீதுதான்.
ஏனென்றால்...அனுதாப அலை
எப்போதும் உங்கள் பக்கம்தான்.
சரி...எங்களையே குறை சொல்கிறீர்களே
உங்களிடம் குறைகளே இல்லையா?
இல்லையென்று யார் சொன்னது?
கருவிலேயே உருவானதுதானே.
நாங்கள் ராமர்களென்று
என்றைக்கும்...எப்போதும்
வேஷம் போட்டதில்லை.
அப்படி
சீதை...கண்ணகியென்று
நடிப்பவர்களை பார்க்கும்போது.....
எங்களால்தான் நீங்கள் கெடுகிறீர்களா?
அப்படியென்று ஒரேயடியாய்
சொல்லிவிடமுடியாது.
இறைவன் ஒரு காமாந்தகன்.
அதற்கு ஒரே சாட்சி நாம்தான்.
விதையிலிருந்து செடியா? - இல்லை
செடியிலிருந்து விதையா?
என்ற விடுகதையை வைத்துகொண்டு
அவன் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்தில்....
உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய் என்று
நீங்களும் நாங்களும்தான்
ஒருவரின் காதை ஒருவர் பற்றி
தோப்புக்கரணம் மட்டும்தான்
போட்டுக்கொள்ள முடியும்.
என்ன செய்ய...?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-22, 9:26 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

மேலே