எனக்குள் அரும்பிய முதல் காதல் 555

**எனக்குள் அரும்பிய முதல் காதல் 555 ***



பேரழகே...


திருவிழா கூட்டத்தில் முதன்
முதலில் உன்னை கண்டேன்..

ஒரு புயல் மையம்கொண்டது
என்னில் உன்மீது...

அப்போது நீ செல்லும் இடமெல்லாம்
உன்னை பின்தொடர்ந்தேன்...

நீ திரும்பி பார்த்தால்
நான் திருப்பி கொள்வேன்...

வளையல்
கடையில் நீ நிற்க...

உன் பெயரை
தெரிந்து கொள்ளவே...

பரிசு
கடையில் நானும்...

மீசைகூட முளைக்கள
அதுக்குள்ள லவ் வா...

யாரோ யாருக்கோ சொன்னது
என் செவிகளில் விழுந்தது...

உனக்கும் கேட்டு இருக்கும்
அதனால்தான் என்னவோ...

என்னை பார்த்து
கல்க்கென சிரித்தாய்...

காதலுக்கு வயதேது எனக்குள்
அரும்பியது முதல் காதல் அல்லவா...

இத்தனை ஆண்டுகளாய்
உன்னை தொடர்கிறேன்...

எல்லோரிடமும்
சிரித்து பேசுபவள்...

என்னை கண்டால் மட்டும் உதடு
சுழுத்து கோபப்பார்வை ஏனடி...

அரும்பு மீசை நாள்முதல் இன்றுவரை
உனக்காக ஏங்குகிறேன்...

இத்தனை ஆண்டுகளில் முதலும்
முடிவும் இந்த கடிதம் தான்...

என் இளமை
தவிப்புகள் இளைப்பாற...

உன் கொங்கைகளின்
நீர்வீழ்ச்சியில் இடம் தருவாயா...

நீ
சம்மதம் சொன்னால்...

உன் நேர்வகிடில்
குங்குமமிட காத்திருக்கிறேன்...

என் பேரழகே.....


**80,90,கால காதல் ...அழகு ...***

***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-Mar-22, 9:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 249

மேலே