Raasi illadhavan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Raasi illadhavan |
இடம் | : aranthangi |
பிறந்த தேதி | : 26-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 13 |
என் இருதய பூவில்
கல்வெட்டாக பொறிக்கப்பட்ட கவிதையே...!
இன்று நீ இல்லாததால்
என் இதயத்தின் எல்லா பரப்பையும்
ஒரு இனம் புரியாத சோகம் ஆக்கிரமித்து கொண்டது.
தேவதைகளின்
எல்லா அம்சமும் பொருந்திய
என் இரண்டாவது அன்னையே...!
என்னை சந்தோசத்தில் மூச்சு
திணறவைத்த முதல் நாவலே...!
நீ இல்லாமல்
நான் அனுபவிக்கும்
இந்த கஷ்டத்தை எழுத
கடல் நீரை மை ஆக்கினால் கூட பத்தாது.
உன்னை காணாத இந்த நாட்களில் தான்
எனக்கும் தாடி வளரும் என்று தெரியும்.
உன்னுடன் பேசாத இந்த பொழுதுகளில் தான்
இரவு இவ்வளவு நீளம் என்று தெரியும்.
- ராசி இல்லாதவன்
நிலவையும் பூக்களையும்
ரசிக்க தொடங்கினேன்,
என் உடம்புக்குள் உற்சாக ரத்தம் ஊறியது,
தேங்கி கிடந்த நான்
திடீரென்று பாய ஆரம்பித்தேன்,
எனக்குள்
ஒரு கவிஞன் உருவானான்.
உன் கால் கொலுசின் ஓசைக்கு
என் காதுகளை அடகு வைத்தேன்.
என் மனதை தூசு தட்டியவளே,
என்னை சூனியத்தில் சுற்றியவளே,
என் மீது அமுதாய் விழுந்த வெயிலே
காரணமின்றி
சுவாசிப்பதை போலவே
காரணமின்றி
உன்னை நினைத்து கொண்டிருக்கிறேன்.
உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கிறேன்.
மௌனத்திற்கு
வலி உண்டென்றும்
பார்வைக்கு
காந்தசக்தி உண்டென்றும்
உணர்ந்து கொண்டேன்.
உன் முகம் வாடியதில்
என் கண்கள் ஈரமானது,
நீ பேசியதால் தானடீ
எனக்கும்
தமிழ் மீது
என்னவளே
உனக்கும் எனக்குமான இடைவெளி
தரைவழியே வெறும் 18 மைல் தான்
ஒருவேளை
இதுதான் சொர்க்கத்திற்கும்
நரகத்திற்குமான இடைவெளியா?
நீ ஏன் வரவில்லை என்று
நீ எப்போதும் வருகின்ற பேருந்து
அழுதுகொண்டே என்னிடம் கேட்கிறது.
எப்படி சொல்லுவேன்
உன்னை பார்க்காத நானும்
ப்ரேக்டௌந் ஆன
அரசு வாகனம் தான் என்று..
- ராசி இல்லாதவன்
விட்டு விட்டு பெய்யும் மழை
விடியாத வானம்
நீர் வடியாத சாலை
நீண்ட தூர நடைபயணம்
அலறும் பேருந்து சப்தம்
அங்குமிங்கும் ஓடும் மாடுகள்
இவையோடு
ஒரு மழை நாளில் நீயும் இருந்தாய்..
துப்பட்டாவில் என் தலையை புதைத்து
தண்ணீரை விரட்டியவளே
இன்று நீ இல்லாததால்
என் தலையின் ஈரம்
இன்னும் காயவில்லை.
இதோ இந்த நடைப்பயணம்
நரகத்தின் நுழைவு வாயிலாக தெரிகிறது.
மாடுகள் கூட
மழைக்கு ஒதுங்கும் இவ்வேளையில்
நானோ மதி கெட்டு
பேருந்துகளுக்கு இடையில்
மரணத்தை தேடுகிறேன்.
என் கோடையின் மழையே
என் வாடையின் வெயிலே
என் பார்வையின் அர்த்தம் அறிந்தவளே
அடுத்த மழைநாள் வருவதற்குள்
வந்துவிடு முடியாவிடில்
நான் பேருந்தின்