ஒரு மழை நாளில்
விட்டு விட்டு பெய்யும் மழை
விடியாத வானம்
நீர் வடியாத சாலை
நீண்ட தூர நடைபயணம்
அலறும் பேருந்து சப்தம்
அங்குமிங்கும் ஓடும் மாடுகள்
இவையோடு
ஒரு மழை நாளில் நீயும் இருந்தாய்..
துப்பட்டாவில் என் தலையை புதைத்து
தண்ணீரை விரட்டியவளே
இன்று நீ இல்லாததால்
என் தலையின் ஈரம்
இன்னும் காயவில்லை.
இதோ இந்த நடைப்பயணம்
நரகத்தின் நுழைவு வாயிலாக தெரிகிறது.
மாடுகள் கூட
மழைக்கு ஒதுங்கும் இவ்வேளையில்
நானோ மதி கெட்டு
பேருந்துகளுக்கு இடையில்
மரணத்தை தேடுகிறேன்.
என் கோடையின் மழையே
என் வாடையின் வெயிலே
என் பார்வையின் அர்த்தம் அறிந்தவளே
அடுத்த மழைநாள் வருவதற்குள்
வந்துவிடு முடியாவிடில்
நான் பேருந்தின் அடியில் புதைவதற்குள் வந்துவிடு
- ராசி இல்லாதவன்