Saidharsan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Saidharsan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 0 |
1. அம்மா
2. அப்பா
3. மகன்
4. மகள்
இன்னும் பலவற்றைச் சொல்ல வேண்டும் நட்புகளே???
அர்ப்பணமானாய் சொப்பனத்திலே
சித்திரமானாய் நித்திரையிலே
கற்பனையிலோ கான் ஆனாய்-பிறர்
காண முடியா வான் ஆனாய்
ஆண்டுகள் ஆயிரம் கரைந்தாலும்
ஆயிரம் அரசுகள் மறைந்தாலும்
கூர் வாளின் வீரத்தை- உன்
ஓர் காலால் நீ முறிப்பாய்
சிலாவே என்றுனை சிலர்
சித்தரிக்கும் வேளையிலும் - என்
கனாவாய் உனில் நான் உறைந்தேன்
தின கனாக்களில் உனை
- கண்டுரைத்தேன்
ஆசை மடல் உனக்காக - இவ்
அருஞ்சொற்களும் உனக்காக
பேசும் நயனம் உனக்காக - இப்
பேதை மனமும் உனக்காக
அன்பே....அருள்மொழி வர்மா
ஆருயிரே என்றெனை
- அழைக்காவிடினும் உன்
வாளுறையிலாவது
கடந்து வந்த பாதையை
சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.
களைப்பாறும் இடைவெளியில்
காலாவதியானவற்றையெல்லாம்
காட்சிப்படுத்தித் தொலைக்கிறது,
ஊரடங்குக் கட்டுப்பாட்டால்
உளைச்சலில் மனக்குரங்கு!
இந்நெடும் பயணத்திலென்னை
ஏறி மிதித்தவர்களை
எள்ளிநகையாடியவர்களை
எண்ணுதற்கில்லை இந்நாளும் எந்நாளும்!
எண்ணாமலிருக்க ஏலாதவள்
அவள் ஒருவள் தான்!
அவளிடம் இன்றெனக்கு
அழுக்காறு ஏதுமில்லை.
அழுக்காறுதானிருந்தால் – அது
உண்மைக் காதலில்லை!
பாமரனாய் இருந்தவனை
பாரறியச் செய்ததும்
தொழிலாளியாய் இருந்தவனை
முதலாளியாய் முன்னேற்றியதும்
அவளின் அளப்பரிய
ஆங்காரம் தானெனினும்
இனிதே எனையுயர்த்திட்ட
ஓங்காரம் அதுவென்பதால்
அணு
அகிலமெங்கும் கிளை பரப்பி
ஆடுதிங்கே உயிர் வேட்டை!
ஊரடங்கைக் கடைப்பிடித்தே
ஆருயிரைக் காத்திருப்போம்!
நுரையீரல் தனைத் தின்ன
நுழைவாயிலைத் திறந்துவைத்தால்
மருத்துவமனை யெங்கிலும்
மரணஓலம் நிறைந்திடுமே!
கொடுமைதான் முடக்கம் – அதுவே
கொரோனாவின் கொட்டமடக்கும்;
வேண்டாதன செய்திட்டால்
வெண்ட்டிலேட்டரே வேண்டியிருக்கும்!
நிர்க்கதியாய் உணர்ந்தாலும்
நிகழ்காலம் தான் நட்டத்தில்;
நிலையென ஏதுமில்லை
வாழ்க்கையெனும் வட்டத்தில்!
பதற்றத்தை நாம் விலக்கி
பங்களிப்பைப் பகிர்ந்திடுவோம்;
ஆயுத மில்லாமலே
அநாயாசமாய் வென்றிடுவோம்!