பொன்னியின் செல்வன்

அர்ப்பணமானாய் சொப்பனத்திலே

சித்திரமானாய் நித்திரையிலே

கற்பனையிலோ கான் ஆனாய்-பிறர்

காண முடியா வான் ஆனாய்

ஆண்டுகள் ஆயிரம் கரைந்தாலும்

ஆயிரம் அரசுகள் மறைந்தாலும்

கூர் வாளின் வீரத்தை- உன்

ஓர் காலால் நீ முறிப்பாய்

சிலாவே என்றுனை சிலர்

சித்தரிக்கும் வேளையிலும் - என்

கனாவாய் உனில் நான் உறைந்தேன்

தின கனாக்களில் உனை
- கண்டுரைத்தேன்

ஆசை மடல் உனக்காக - இவ்

அருஞ்சொற்களும் உனக்காக

பேசும் நயனம் உனக்காக - இப்

பேதை மனமும் உனக்காக

அன்பே....அருள்மொழி வர்மா

ஆருயிரே என்றெனை
- அழைக்காவிடினும் உன்

வாளுறையிலாவது எனை
- இணைத்துக் கொள் உன்

கரம் பிடித்த வாளோடு இணையும்

வரம் கொடுத்தாய் என
- வாழ்ந்திருப்பேன்

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (8-Apr-20, 3:01 pm)
பார்வை : 448

மேலே