வென்றிடுவோம்
அகிலமெங்கும் கிளை பரப்பி
ஆடுதிங்கே உயிர் வேட்டை!
ஊரடங்கைக் கடைப்பிடித்தே
ஆருயிரைக் காத்திருப்போம்!
நுரையீரல் தனைத் தின்ன
நுழைவாயிலைத் திறந்துவைத்தால்
மருத்துவமனை யெங்கிலும்
மரணஓலம் நிறைந்திடுமே!
கொடுமைதான் முடக்கம் – அதுவே
கொரோனாவின் கொட்டமடக்கும்;
வேண்டாதன செய்திட்டால்
வெண்ட்டிலேட்டரே வேண்டியிருக்கும்!
நிர்க்கதியாய் உணர்ந்தாலும்
நிகழ்காலம் தான் நட்டத்தில்;
நிலையென ஏதுமில்லை
வாழ்க்கையெனும் வட்டத்தில்!
பதற்றத்தை நாம் விலக்கி
பங்களிப்பைப் பகிர்ந்திடுவோம்;
ஆயுத மில்லாமலே
அநாயாசமாய் வென்றிடுவோம்!