கழுகுப் பார்வை👀-------இஷான்
குறுக்கு வழிக்கு
மஞ்சல் தடவி...
குற்றங்களை
நொறுக்கு தீனியாக்கி...
பவனி வருகின்ற
வெண் ஆடையர்கள்....
ஒலிபெருக்கியில்
குரலை ஒத்தடமாக்கி...
நீதிக்கு விளம்பரம் காட்டி...
வார்த்தைகளால் சேவைக்கு
கட்டடம் வரைந்து காட்டுகின்றனர்...
கொழுத்த சப்தத்துடன்
கைதட்டலும்....
சின்னங்களின் கூவலும்
ஒன்றுகூடலாக...
அந்தப் வழியாக வந்த
என் வண்டியின் மின்விளக்கு
கழுகுப் பார்வை பார்த்துவிட்டு
முகத்தை திருப்புகிறது...
(இஷான்)