கொறோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா மூன்றெழுத்து
வைரஸ் மூன்றெழுத்து
அது அனைவருக்கும்
ஏற்படுத்திய பயம் மூன்றெழுத்து
அது செழிக்க விரும்பும்
மூச்சு மூன்றெழுத்து
அது அழிக்க விரும்பும்
உயிர் மூன்றெழுத்து

ஏ வைரசே

சீனாவில் பிறந்த
உன்னைப்பற்றிய
உண்மையினை
பாடத் துடிக்கிறது என் பா நா
பென் மையினால்
சாடத் துடிக்கிறது என் பேனா

மாநாட்டைத் திறந்து
எங்கள் மா நாட்டை
மூடியவன் நீ

பல போராட்டங்களால்
மூடப்படாத டாஸ்மாக்கை
உன் ஓர் ஆட்டத்தால்
மூட வைத்தாய்

கொலை கொள்ளை கற்பழிப்பு
உன்னால் தள்ளிப் போடப்பட்டுள்ளது

லஞ்சம் ஊழல் விபத்து
குறைந்துள்ளது

அடக்கம் அமைதி சுத்தம்
நிறைந்துள்ளது

மனிதம் சிலரிடம்
ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது

உன் கொடூரம் மனிதனின் உயிர்களை ஆங்காங்கே கொட்டிப் பார்க்கிறது

நுரையீரல் நுழைந்து
எங்களுக்கு மா ரணத்தை மட்டுமா கொடுக்கிராய்
மரணத்தையும் அல்லவா
பரிசளிக்கிராய்

உன்னால் காதலர்கள் சுற்றித்திரிந்த வீதிகளில் எல்லாம் காவலர்கள்

காதலைத் தேடி அல்ல
தலை தேடி

மாஸ் ஹீரோவையும் கூட
மாஸ்க் அணிய வைத்தவன் நீ

அமெரிக்காவையே
தலைகுனிய வைத்தவன் நீ

இந்தியா இன்று
பிச்சைக்காரர்கள்
சுற்றித்திரியாத நாடு
உன்னால்

மாத்திரை கண்டுபிடிக்க முடியாமல்
மா திரை அணிந்துள்ளாய்

எங்கள் உயிர்கள் மீது
கருணை காட்டு
உன் கடைக்கண்ணால்

கவிஞா் புதுவை குமார்

எழுதியவர் : குமார் (7-Apr-20, 4:44 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 201

மேலே