ஒரு குழந்தையின் ஆனந்த கண்ணீர்
அன்று...
எத்தனை நாள்
ஏங்கி இருப்பேன்
தவித்திருப்பேன்
அப்பா, அம்மா
என் கூட ஒரு நாள்
இருந்ததில்லை என்று...
அப்பாவை கேட்டால்
நேரமில்லை வேலை
இருக்கிறது என்றார்...
அம்மாவை கேட்டால்
வேலைக்கும் போகணும்
நேரமில்லை என்றாள்...
அவர்களுடன்...
பேசவும் முடியவில்லை
விளையாடவும் முடியவில்லை
இன்று...
எந்நேரமும் என் கூட
தான் இருக்கிறார்கள்...
நான் யாருக்கு
நன்றி சொல்ல
அந்த கடவுள்கா....
இல்ல
இந்த கொரோனாகா....
இத்தனை நாள் இருந்த
சந்தோசமே போதும்
தனித்திரு....
விழித்திரு...
விலகி இரு...
நம் வீட்டில்...
விரட்டி விடு...
ஓட விடு...
அழித்து விடு..
கொரோனவை
நம் நாட்டில்....