சிகரம் நீ

என் உயிர் தந்தையே ..
உன் உயிர் துச்சமாய் ..
எல்லையில் நிற்கின்றாய்
எங்கள் நினைவுகள் ஏந்தி …. உங்கள் நிகழ்வுகள் நீட்டிக்கின்றாய் !!
எங்கள் கனவுகள் மெய்க்க…. உங்கள் உணர்வுகள் மாய்த்து
எங்கள் சுதந்திரம் காக்க …. உங்கள் சுவாசம் நீர்த்து
எங்கள் வாழ்க்கை வாழ நீங்கள் அரனாய் இருந்து..
தெரியா எதிரிகள்
சொல்லாத போர்கள்
மனித மனங்கள் தாங்காத இயற்க்கை
தாங்கி நிற்க்கும் சிகரம் நீ..
என்றோ வருவாய் என்று தூங்கும் கண்கள்
விடியல் நோக்கி பார்க்கிறது
விடியும் பொழுது உன் விழியில் விடிந்தால்
விதி செய்த சக்திக்கு நன்றி சொல்வேன்
வினை வந்து நீயும் வராமல் போனால்
விழியோர கண்ணீர் உன் தியாகம் சொல்லி
மூவர்ண ஆடை அணைத்து
மூவுலகை தாண்டி செல்ல வழியனுப்புவோம் !!!

எழுதியவர் : Ganesh (7-Apr-20, 7:38 pm)
சேர்த்தது : Ganesh
Tanglish : sikaram nee
பார்வை : 77

மேலே