Samthaz - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Samthaz
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Apr-2018
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  4

என் படைப்புகள்
Samthaz செய்திகள்
Samthaz - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2018 7:16 pm

பாம்பு தன் சட்டையை
உரித்து கழற்றியது.
ஹேங்கரில் மாட்டியது.
போனது ஒரு வழியில்.
பாம்பு சட்டையில்
பைகள் இருந்தன.
பை உள்ளே சில
கோலி குண்டுகளும்
சில சிறுவரும்.
விளையாடினர்.
விளையாடும் வெளியில்
மரங்கள் இருந்தன.
மரங்களில் பறவைகள்.
பறவைகள் பறக்க
நகரம் இருந்தது.
நகரத்திற்கு அப்பால்
பள்ளதாக்குகள்.
தாண்டிப்போனால்
நாடு விரியும்.
பெரும் நாட்டில்
முட்டாள்கள் இருந்தனர்.
முட்டாள்கள் கூடி
ஒரு முட்டாளை
தேர்ந்தெடுப்பர்.
கோலி விளையாடும்
சிறுவர் அப்போது
அனுமதிக்கப்படார்...
தேர்ந்த முட்டாள்
சட்டம் போடுவார்.
பாம்பு வாரியம் அமைக்க...
பாம்புகள் எப்போதும்
உள்ளூரில் மட்டும்
சட்டை உரிக்க

மேலும்

நைஸ் 16-Apr-2018 10:29 am
அன்பிற்குரியவற்கு வணக்கம். தேசம் மீண்டால் சரி... 15-Apr-2018 8:52 pm
கற்பனை நயம் பாம்பு வாரியம் வாரியம் தொடர பாம்புப் படைகள் பெருகட்டும் ! 15-Apr-2018 8:49 pm
பாம்பு சட்டை உரைக்கும் (தோல்) நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே ! நஞ்சிருக்கும் தோலுரிக்கும் வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது 15-Apr-2018 8:47 pm
Samthaz - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2018 6:53 pm

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்

மேலும்

தமிழ் வருடுகிறது நண்பரே. 15-Apr-2018 7:42 pm
Samthaz - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2018 11:26 pm

பெண்ணாய்ப் பிறந்ததனால் புண்ணாய்ப் போனவர்கள் நாங்கள்
சுரண்டிவிட்ட சொரணையிலே கரண்டியிட்டு ருசி பார்க்கப்படுபவர்கள்
அமாவாசை இருட்டினிலும் அம்மா ஆசை மறந்தவர்கள்

புண்ணிய பூமியிலே கண்ணியமாய் பிறந்திருந்தும்
இன்னும் அந்நியமாய் அலைபாயும் ஆதாமின் தோட்டத்தின்
அழகான ஆப்பிள்க் கனிகள் நாங்கள்

முக்தி பெற்ற யமுனையிலும் சக்தி பெற்ற கங்கையிலும்
சளைக்காமல் பெண்மையின் மணம் வீசும் போது
இன்னும் அடுப்படியில் அரங்கேறும் அக்கிரமங்கள்.

கடலைக் கலக்கிவிட்டு எங்கள் கர்ப்பத்தில் புகுத்திவிட்டு
அர்ப்பமாய் தூரத்தில் நின்று பெண்ணியம் பேசுகின்ற
பேதைகளின் போதைப் பேச்சினிலே புதைந்து விட்டோம்

நதியாக நாமிருந்த

மேலும்

படித்து விட்டு துக்கம் தாங்க முடியவில்லை... பாருங்கள்...அழுது கண்கள் வீங்கி விட்டன... இப்படியே நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள் 15-Apr-2018 9:26 am
Samthaz - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 8:38 am

வானமும் கடலும் கூடி கருத்தரித்த மழைக்குஞ்சு, மேக வயிற்றினிலே தவழுகிறாள்
காலமும் நேரமும் கூடி வர கர்பவலியில் அலறுகிறாள் அழுகையுடன் இடியாக
இடைக்கிடையில் மின்னலாய் வந்து போகும் அவளின் அழகான இடை அழகு
பிள்ளைப் பேறு காலம் வந்தவுடன் கறுப்புக்கொடியுடன் சலசலப்பு உலகமெங்கும்

மெதுவாய் ஒவ்வொன்றாய் உதிருகின்ற மழைக்குஞ்சு தென்றலுடன் விளையாடும்
மேக வயிறும் சூரிய சத்திரசிகிச்சையினால் கிழிக்கப்பட்டு சோவெனக் கொட்டும் குஞ்சுகள்
ஒன்றா இரண்டா.. பல கோடிக் குஞ்சுகள் பாரெல்லாம் பரந்தோடும் பாரபட்சமின்றி
சிப்பிக்குள் விழுந்த குஞ்சு முத்தாக.. மனித தலையில் விழுந்த குஞ்சு ஜலதோசமாக..

வாய்திறந்த நிலமதிலே தாய் த

மேலும்

Samthaz - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 8:31 am

கறுப்பின் கர்ப்புக்குள் வெளுத்துப்போனது ஏழையின்; வெறுமையான இரவு
சட்டை கழற்றிய பாம்பாய் படுத்துறங்குது பாவப்பட்ட வயிற்றுக்குள் வெறுமையான குடல்
இஞ்சித் தேத்தண்ணிக்கும் கெஞ்சித் திரியும் அஞ்சிப் போன பார்வையில் முகம்
மிஞ்சிப் போனால் கிடைப்பது எஞ்சிப்போன குப்பைத்தொட்டி உணவுகள்

கட்டியணைக்க இருப்பதுவோ நடைபாதைச் சுவர்களின் சுவடுகள்
இரண்டு கால்களுக்கிடையே சுருங்கிப் போன இரங்கும் கரங்களின் தாம்பத்யம்
குளிருக்குப் பங்குவைக்க பஞ்சாய்ப்போன பழைய கம்பளித் துண்டுகள்
தகரப் பாத்திரத்தில் ஆயிரம் பீரங்கிகள் தாக்கிய துளைகளின் உண்ணாவிரதம்

மடிந்த மனசிற்குள் எமனைப் பார்ப்பதற்காய் அடையாளமிடப்பட்ட கால் தட

மேலும்

இங்கே அவலங்கள் யாவும் மலிந்து போய்விட்டது. நாம் வாழும் பூமியில் நிம்மதியை விடவும் கலகங்கள் தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 1:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே