Shunmugam Suresh - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Shunmugam Suresh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-May-2015 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 7 |
பேச்சு சரியாய் வராத நாட்களில்
உன்னை அழைக்க என் மனம் விரும்பியது...யாரிடமோ
தூக்கிக் கொடுக்கிறாய்...புதிதாய் ஓர்
சொந்தம் என எண்ணிச் சென்ற
கொஞ்ச நாட்களில், முழுவதும்
புரிகிறது உங்களுக்கு நான் சுமையென்று...விதியின் விவரம்
அறியும் தருணம், என் போல
பாவச் சுமைகள் என்னுடன் பழக,
சகோதரனாய், சகோதரியாய்,
தோழனாய், தோழியாய்,
உறவுகள் இருக்க,
என் மௌனமும் நிரந்தரமானது....
ஊமை ஊனனாய் உறக்கக் கத்துகிறேன்...அம்மாவென்று
என் வாழ்வின் தனிமை
உன் நினைவுகளால் மட்டுமே
நிரப்பப் படுகின்றன...!
என் வாழ்வின் தனிமை
உன் நினைவுகளால் மட்டுமே
நிரப்பப் படுகின்றன...!
நிஜங்கள் எல்லாம் என்னை ஏமாற்றும்பொழுது கற்பனையிலாவது வாழ்ந்து கொள்கிறேன்... என் வாழ்க்கையை
இமய மலை ஓரத்தில் நான் வீற்றிருக்க, பனிப் பொழியும் சத்தம்
காதில் ரிங்காரமிட,
மெல்ல கண் திறந்து கதிரவனும்
எனைக் காண, குளிர்க் காற்று மேகத்தில் பட்டு, பனிப் பொழிவு
மழைத் துளியாய் மாற,
நீர்த் துளியுடன் சேர்ந்து வந்து
ஒளிக்கதிர் எனை எழுப்ப, நடுங்கும்
குளிரில் என்னுடல் நாட்டியம் ஆட-
என் துயில் மெல்லக் கலைகிறது..மார்கழியில்