கனவு

இமய மலை ஓரத்தில் நான் வீற்றிருக்க, பனிப் பொழியும் சத்தம்
காதில் ரிங்காரமிட,
மெல்ல கண் திறந்து கதிரவனும்
எனைக் காண, குளிர்க் காற்று மேகத்தில் பட்டு, பனிப் பொழிவு
மழைத் துளியாய் மாற,
நீர்த் துளியுடன் சேர்ந்து வந்து
ஒளிக்கதிர் எனை எழுப்ப, நடுங்கும்
குளிரில் என்னுடல் நாட்டியம் ஆட-
என் துயில் மெல்லக் கலைகிறது..மார்கழியில்

எழுதியவர் : (7-May-15, 9:57 am)
Tanglish : kanavu
பார்வை : 82

மேலே