சுதந்திரம் மலர்த்தும் சுய அறிவு -ரகு
பெருங்கோபத்திற்கான
கச்சித அச்சாணி ''முடுக்குதல்''
பெரும்பாலும் விழிகளில்
செவ்வரிகள் ஓடச்செய்வது
அதன் குரூரம்
சர்வ சாதாரணமாக
முடுக்குதல் திணிக்கப்படுவதும்
மேவிய காரணிகளை
அடுக்கி அனுமானிக்க செய்வதும்
பதின் வயதினற்கும்
குழந்தைகளுக்குமாகி இருக்கிறது
தனக்கான ஆசைகளின்
முனைப்பபையும்
முடுக்குதலின் வாயிலாக
பிறரிடத்தில் பரப்பி
மறைத்திருக்கலாம் அதன்
முகாரியை
எல்லையற்ற அதிகாரம்
அரங்கேறி
வீர வணக்கத்தோடு
முடிவுருவதிலும்
முடுக்குதல்
வளர்த்தியிருக்கலாம் தன்
அதர்மத்தை
சாதிக்க வைத்த
முடுக்குதலிலும்
மீந்திருக்கும்
சிற்சில வெறுப்புகள்
வாழ்க்கைப் பெருவெளியில்
முடுக்குதல் காட்டிலும்
திறன்படச் சாதித்திருக்கிறது
சுதந்திரம் மலர்த்தும்
சுய அறிவு !