அனாதை
பேச்சு சரியாய் வராத நாட்களில்
உன்னை அழைக்க என் மனம் விரும்பியது...யாரிடமோ
தூக்கிக் கொடுக்கிறாய்...புதிதாய் ஓர்
சொந்தம் என எண்ணிச் சென்ற
கொஞ்ச நாட்களில், முழுவதும்
புரிகிறது உங்களுக்கு நான் சுமையென்று...விதியின் விவரம்
அறியும் தருணம், என் போல
பாவச் சுமைகள் என்னுடன் பழக,
சகோதரனாய், சகோதரியாய்,
தோழனாய், தோழியாய்,
உறவுகள் இருக்க,
என் மௌனமும் நிரந்தரமானது....
ஊமை ஊனனாய் உறக்கக் கத்துகிறேன்...அம்மாவென்று