இதயத்தின் கண்ணாடி
![](https://eluthu.com/images/loading.gif)
விழிகளில் விரியும் விவரங்கள்!
விலை மதிப்பில்லா அதிசயங்கள்!
விழிகளில் ஒளிரும் பாசங்கள்!
விழிகளில் வழியும் சோகங்கள்!
விழிகளில் தெரியும் கோபங்கள்!
விழிகளில் வாழும் சினேகங்கள்!
விழிகளில் தோன்றும் உணர்வுகள்
வெளியில் படரும் ரேகை வளைவுகள்
இவை உறைக்கும் பயங்கள்,பயங்கரங்கள்!
விழிகளே வாசித்திடும் உணர்வுகள் - தேவையில்லா
விளக்கங்கள் நீண்டிடும் வார்த்தைகள்
இரு விழிகளே
இதயத்தின் கண்ணாடி!