என் உரிமை

வீட்டை விட்டு வெளிவந்து ..
சாலையில் இறங்கிய போது ..
எதிரில் ஒரு சிறு குழந்தை..
கையிலிருந்த சில்லறை அதனிடம் மாறிட..
சாலையில்..வாடகை வாகனத்திற்கு பேரங்கள்.
நடைபாதையில் சில குடும்பங்கள்.. சொற்ப சொத்துக்களோடு .
..
பால் பணம் கட்டி விட்டு திரும்புகையில்
தன் வாகனத்தின் கண்ணாடியை
இடித்து உடைத்து விட்டு
கவலையற்று செல்லும் மனிதர்..
இன்னொரு விபத்துக்கான ஆயத்தமுடன்
விரைகின்ற அவசர ஊர்தி..
தலைக் கவசம் இல்லாமல்
மாட்டிக்கொண்ட மனிதர் நீட்டும் கப்பம்..
சாலையில் மறியல்..எதற்காகவோ..
அடுத்த வீதியில் நுழைந்து..
மழை நீர் மறைத்த குழியில் விழுந்து எழுந்து..
..

மயானத்திற்கு ..
மலர்ந்த முகத்துடன் செல்லும்
தீக்குளித்த தொண்டனின் இறுதி ஊர்வலம் கடந்து ..
குப்பை நாற்றத்துடன் சாலையில் பாதிக் குப்பையை
பறக்க விட்டு மோதி செல்ல பார்க்கும் லாரிக்கும்
இடித்து போகவிருந்த தண்ணீர் லாரிக்கும் வழி விட்டு,
வருமான வரி அலுவலகத்தில் நுழைந்து , பிதுங்கி வெளி வந்து,
மின்சார வரி , குடிநீர் வரி, வீட்டு வரி எல்லாம் கட்டியபின்,
..
பல அடுக்கு மாடி கட்டிடத்தில் வந்து அடைந்தார்..
பணி ஒய்வு பெற்று
பத்து ஆண்டுகளே ஆகியிருந்த பத்மநாபன் ..
ஏழாவது மாடிக்கு ..மின் தடை காரணத்தால்
படியேறி மூச்சிரைத்து கூட்டினுள் புகுந்து
தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்..
இம்முறையும் என் ஒட்டு நோட்டாவிற்கே என்று!
..
பாவம் ..எல்லா கோபங்களுக்கும்
அவருக்கு வழி அதுதான்!
அவர் கையில் உரிமை என்ற பேரில்
இருப்பதும் அது ஒன்றுதான்!

எழுதியவர் : கருணா (14-May-15, 5:50 pm)
Tanglish : en urimai
பார்வை : 316

மேலே