திருச்சி ஜாவித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திருச்சி ஜாவித் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 01-Dec-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 375 |
புள்ளி | : 58 |
வசதியானவனை பார்த்து பழகிவிட்டோம்
வரியேரின் வாசனை நுகராமல்,
கஸ்தூரி மணம் அரிய
ஏழையின் வாடை அறியாமல் ஆகாது!
விண்ணில் வித்தியசத்தை விளங்கியவர்கள்
விவசாயின் வறுமையை விளங்கி கொள்ளவில்லை !
பண உயரத்தில் உள்ளவனை மதித்து
பனைமரம் உயரம் ஏறுபவனை மிதித்தோம்
பயணப்பட்ட இயற்கையால்
நாம் சாபம் அடைந்தோம்!
விண்ணில் பல வியப்புகளை படைத்திட்டு
கால் விளும்பில் கற்கல் இடரும் சிந்தனை கொள்ளாமல்!
ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்து விட்டு
பூமியில் அகாழபாதளத்தை மறந்தோம்!
சின்ன சின்ன குழந்தை
சிங்கார குழந்தை!
பிஞ்சு பிஞ்சு கைகள் செல்லம்
கொஞ்சும் குழந்தை!
குட்டி குட்டி கால்கள் தத்தி நடை போடும் குழந்தை!
முத்து முத்து கண்கள் மின்னல் ஒளி குழந்தை!
அழகாய் சிரிக்கும் குழந்தை
என அமுது குட்டி குழந்தை!
பாப்பா ஓ பாப்பா
ஒன்று சொல் என் செல்ல பாப்பா!
உயிர்களுக்கு கண்கள் இரண்டு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
முக்காலிக்கு கால்கள் மூன்று
ஆட்டுக்கு கால்கள் நாண்கு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
நம் ஓர் கை விரல்கள் ஐந்து
உண்ணும் உணவின் சுவை ஆறு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
வானவில் வண்ணம் ஏழு
சிலந்திக்கு கால்கள் எட்டு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா
வானில் கோள்கள் ஒன்பது
நம் இரு கால் விரல்கள் பாத்து
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா
ஆனந்தம்
மழையில் சாரல் ஆனந்தம்
அருவியின் ஓசை ஆனந்தம்
இரவில் விடியல் ஆனந்தம்
பகலில் மாலை ஆனந்தம்
நாளில் காலை ஆனந்தம்
மலரின் மலர்சி ஆனந்தம்
நதியின் பாதை ஆனந்தம்
வெயிலில் நிழல் ஆனந்தம்
குளிர்ச்சியில் வெப்பம் ஆனந்தம்
காற்றில் தென்றல் ஆனந்தம்
பனியின் குளிர் ஆனந்தம்
மயிலின் ஆட்டம் ஆனந்தம்
மானின் ஓட்டம் ஆனந்தம்
குயிலின் கானம் ஆனந்தம்
பாவையின் பார்வை ஆனந்தம்
தீபாவளி பலகார(ண)ங்கள்
எண்ணெய் பலகாரங்கள் என் உடலுக்கு கேடுக்க
பல காரணங்கள் என்னா காரணமோ அறியவில்லை
பல காரணங்களால் எண்ணெய் பலகாரங்கள்
என்னை ஈர்க்கின்றன !
என் ,
அன்பின் சுவையானவள் !
அழகுக்கு பொருளானவள் !
ஆசையின் நிழளானவள்!- என்..
கனவுகளின் உருவமானவள்! --அவளை
'காதலி ', 'காத(லி)' என்று அழைப்பதைவிட...
வேறுயெப்படி அழைப்பது.....?
மதுவை
குடித்தால்தான்,
மயக்கம் வரும் - ஆனால்
பார்த்தவுடன் மயக்கம் வருவது
உன் உதடுகள்...