பாப்பா ஓ பாப்பா

பாப்பா ஓ பாப்பா
ஒன்று சொல் என் செல்ல பாப்பா!
உயிர்களுக்கு கண்கள் இரண்டு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
முக்காலிக்கு கால்கள் மூன்று
ஆட்டுக்கு கால்கள் நாண்கு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
நம் ஓர் கை விரல்கள் ஐந்து
உண்ணும் உணவின் சுவை ஆறு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா!
வானவில் வண்ணம் ஏழு
சிலந்திக்கு கால்கள் எட்டு
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா
வானில் கோள்கள் ஒன்பது
நம் இரு கால் விரல்கள் பாத்து
பாப்பா ஓ பாப்பா என் செல்ல பாப்பா

எழுதியவர் : (7-Oct-19, 9:39 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 70

மேலே