என்னை நானே

என்னை நானே பார்க்கும்
தருணம்

எப்பொழுதாவது நிகழ்வது

எதுவும் தோனாத பொழுது
அது

என்னை பார்த்துக் கொள்வது
என்பது

பிறர் காண முஸ்தீபு

அவசியமான தொடர்கதை

என்னை நானே பார்க்கும்
நேரம் வர

ஏதோ ஒன்று விலகுவது
போன்ற உணர்வு

அப்பொழுதும் மாறவில்லை

பிறர்காண என்னை பார்ப்பது

இப்பொழுதும் அவசியம்தான்
ஆனால்

அதில் ஒரு அவசரமிருக்குது

எழுதியவர் : நா.சேகர் (6-Oct-19, 5:49 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ennai naaney
பார்வை : 513

மேலே