சென்னை

ஏங்குகிறது என்நெஞ்சம்
ஏனிந்த நிலையென்று
அழகுமிகு சென்னையும்
அலங்கோலம் ஆனதென்று ?

கண்டுகளித்த இடமெல்லாம்
கனவில்வந்த காட்சியானது
ரசித்துமகிழ்ந்த நகரமும்
ரம்மியமிழந்த நரகமானது !

மனங்கவர்ந்த பூங்காக்கள்
மரணம்தழுவிய பூமியானது
பயன்படுத்திய ஆறுஏரிகள்
பயனற்றப் பாலையானது !

செப்பனிடாத சாலைகள்
செவ்வாய்கிரக நிலையானது
அலங்கார வளைவுகள்
அழுக்கேறி அழகிழந்தது !

நடந்துசென்ற நடைபாதை
நகர்ந்துநகர்ந்து மறைந்தது
மணித்துளி மழைக்கின்று
மணிக்கணக்கு நெரிசலிங்கு !

அக்கால சென்னையை
எக்காலமும் மறவேன்
இக்காலத்தை நினைத்து
இருக்கும்வரை அழுவேன் !


பழனி குமார்
06.10.2019

எழுதியவர் : பழனி குமார் (6-Oct-19, 7:12 am)
பார்வை : 265

மேலே