துரைராசசிங்கம் இகபரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  துரைராசசிங்கம் இகபரன்
இடம்:  மட்டக்களப்பு
பிறந்த தேதி :  24-May-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  3

என் படைப்புகள்
துரைராசசிங்கம் இகபரன் செய்திகள்
துரைராசசிங்கம் இகபரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2016 10:05 am

காலங்கள் கடந்தாலும் கயவர்கள் மலிந்தாலும்
கட்டிக்காப்போம் தமிழிதனை
தமிழாய்ப் பிறந்து தமிழ்தனைப் பேசி
தமிழனாய் வாழ்வோம் நம் வாழ்விதனை
இச்சைகள் கடந்து இன்னல்கள் தகர்த்து
இழிவறக்கபோம் இனியிதனை
பரகமகிழ்ந்து பார்த்திருக்க - இந்தப்
பாதையில் காண்போம் விடிவுதன்னை

மேலும்

துரைராசசிங்கம் இகபரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 3:11 pm

கண்ணில் கண்ணீர் துளிரும் போது
கடவுள் துடைக்கிறார்
கருத்தில் கோபம் கனலும் போது
கடவுள் கரைக்கின்றார்
முகத்தில் புன்னகை மலரும்போது
முதல்வன் சிரிக்கின்றார்
முழுதும் ஆணவம் அழியும்போது
முத்தியை அளிக்கின்றார்
இனங்கள் ஒன்றாய் இணங்கும்போது
இறைவன் மலர்கின்றார்
இங்கிதம் மனிதன் பழகும்போது
இனியவன் வளம்தருவர்
ஆழமான பக்தர் மனதில்
ஆண்டவன் வாழ்கின்றார்
ஆசாபாசம் அறியா மனதில்
ஆதவன் உதிக்கின்றார்

மேலும்

உண்மைதான் நல்லவனுக்கு கள்ளம் தெரியாது கெட்டவனுக்கு கள்ளத்தை தவிர ஏதும் தெரியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2015 5:44 pm
உண்மை natpe... 17-Dec-2015 4:32 pm
சிறப்பு.. 17-Dec-2015 4:20 pm
துரைராசசிங்கம் இகபரன் - IMYAVAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2015 10:42 pm

ஆதியில் ஆண்டவன்
அளித்த மொழி
அண்மையில் தமிழன்
அழிக்கும் மொழி

அப்போ வேட்டியில்
உதித்த மொழி
இப்போ ஜீன்சினில்
அழியும் மொழி

அன்றோ ஆன்றோர்
அமைத்த மொழி
ஆங்கிலம் இன்று
கலந்த மொழி

உலகுக் கென்றும்
உகந்த மொழி
உண்மையை என்றும்
உணர்த்தும் மொழி

காலம் தாண்டி
வாழும் மொழி
காசினி எங்கும்
கமழும் மொழி

இலக்கியம் பல
ஈன்ற மொழி
இலக்கணம் உலகுக்
ஈந்த மொழி

உலகில் என்றும்
உழலும் மொழி
உண்மை என்றும்
உன்றன் மொழி

சிதையும் இது எம்
தாயின் மொழி
சிதைகிறோம் நாம் எம்
தந்தை வழி

மேலும்

இது நான் எழுதிய கவிதை. login இல் வந்த சிறு பிழையால் என் தம்பியின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறேன் _து. இகபரன் 17-Dec-2015 7:56 am
என் நெஞ்சில் வாழும் சுவாசமும் தமிழே! தமிழ் இன்றி உலகும் இல்லை நானும் இல்லை ஆனால் பலர் தமிழை தூற்றினாலும் என் தமிழின் அழகின் கால் தூசுக்கும் வெள்ளையன் மொழிகள் இல்லை 17-Dec-2015 1:41 am
துரைராசசிங்கம் இகபரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 11:57 pm

கங்குலின் கறை நீங்கி
கதிரவன் கனல் கொழிக்கும்
காரோடும் ககனமெல்லாம்
கனலவன் கதிர் நிறைக்கும்

உலகமதன் உச்சியிலே
உதையவன் நிலை கொள்வான்
உழைத்துக் களைத்த உழவர் மனதில்
உதிரும் வேர்வை பார்ப்பான்

மன்னவன் மறைந்த பின்பு
மாதேவி வருவாள்
மங்குலின் மகாராணி
மண்ணுலகை மீட்பாள்

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Dec-2015 1:12 am
மேலும்...
கருத்துகள்

மேலே