தமிழ்
ஆதியில் ஆண்டவன்
அளித்த மொழி
அண்மையில் தமிழன்
அழிக்கும் மொழி
அப்போ வேட்டியில்
உதித்த மொழி
இப்போ ஜீன்சினில்
அழியும் மொழி
அன்றோ ஆன்றோர்
அமைத்த மொழி
ஆங்கிலம் இன்று
கலந்த மொழி
உலகுக் கென்றும்
உகந்த மொழி
உண்மையை என்றும்
உணர்த்தும் மொழி
காலம் தாண்டி
வாழும் மொழி
காசினி எங்கும்
கமழும் மொழி
இலக்கியம் பல
ஈன்ற மொழி
இலக்கணம் உலகுக்
ஈந்த மொழி
உலகில் என்றும்
உழலும் மொழி
உண்மை என்றும்
உன்றன் மொழி
சிதையும் இது எம்
தாயின் மொழி
சிதைகிறோம் நாம் எம்
தந்தை வழி