எழுத்து தளம் என்றொரு அழகுப்பூங்கா
எழுத்து
ஒரு தளம்,
கவி கூடும்
ஒரு மேடை.
உலகின் மூலை முடுக்கு
ஒரு வலைக்குள்.
உணர்வு ஊற்று
உள்வாங்கும் ஒரு கிடங்கு.
கவிதை
கண் சிமிட்டும்,
கஜல் கூட
களிப்பூட்டும்.
காதல்
கவிதை மலரும்,
அக்காதல்
மனதுக்குள் மழை வரும்,
வெள்ளம் தங்காது
கவிதையாய் வெளி வரும்.
எங்கள் கண் முன்
வந்து நிறையும்,
வாஞ்சையை நினைவூட்டும்.
25000 பேர் என்று
கணக்கு இங்கே,
எழுதுகிறவர்களை
பழகுகிறவர்களை,
மனக்கண்ணால்
நேசிக்கிறோம்,
சிலர் முறைக்க,
சிலர் ரசிக்க,
சிலர் களிக்க,
பலர் கருத்திட,
கல்லா கட்டுகிறது
கவிதை சோலை.
போட்டி இப்போது
ஜல்லிக்கட்டு போலத்தான்
தடைப்பட்டது;
தருமிகள் இங்கு இல்லை,
போட்டிகள் ஒன்றும்
போட்டிகளாக இல்லை,
நீயா, நானா என்று
வரிந்து கட்டிக்கொண்டு
வர்ணம் பூசும்
வேடிக்கை விளையாட்டு.
வாடிக்கையாய்
கிடைக்கும் நேரம்
வந்து இருந்து
கூவி செல்லும் கவிக்குயில்கள்
தினம் வருக, எச்சம் இடுக.
மிச்சம் இருக்கும்
எல்லாம் இங்கே
அழகிய கண் காட்சி.
சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,
என்பது போல
எழுத எழுத தான் இங்கே
புலமை பெருகப்பார்க்கிறோம்.
இந்தப்பூங்காவில்
வந்து பாருங்கள்,
அழகு அழகு
அவ்வளவு அழகு!
அவ்வளவும் அழகு!!