என் கவிதை
கவிதை ...........!!!
தனியே வரிகளல்ல
தனியே வலிகளல்ல
தனியே வார்த்தையாளமல்ல
தனியே உணர்வல்ல
தனியே உணர்ச்சியுமல்ல ...
தனியே தனி தேவையுமல்ல
தனியே தனி விருப்பமுமல்ல ....
தனியே அனுபவமுமல்ல ...
தனியே அறிவுமல்ல ....
தனியே இன்பமுமல்ல
தனியே துன்பமுமல்ல ....
தனியே ஆசையுமல்ல ....
தனியே மோகமுமல்ல ...
தனியே ரசனையுமல்ல
தனியே கற்பனையுமல்ல ...
தனியே உண்மையுமல்ல
கவிதை .....!!!
ஆத்மாவின் வெளிப்பாடு ...
ஆத்மாவின் உந்தல்
ஆத்மாவின் உணர்வு
ஆத்மாவின் செயற்பாடு ...
ஆத்மாவின் தொழிற்பாடு
ஆத்மாவின் கடமை
ஆத்மாவின் தேவை
ஆத்மாவின் தேடல்
ஆத்மாவின் ஆரம்பம்
ஆத்மாவின் முடிவு ........!!!
கவிதை ......!!!
எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ ....
அதை எழுதுகிறேன் இது கருத்தாகவும் ...
இருக்கலாம் கருதற்றும் இருக்கலாம் ....
ஆத்மா என்றால் யாருக்கு தெரியும் ...
அதன் விளக்கமும் நிறைவும் .....?