எழுத்துத் தோழமையே -- 2 -- - சக்கரைவாசன்

எழுத்துத் தோழமையே
**************************************************

சடம்பு ஏறும் முன்னரே சங்கதனை வருணித்து (மஞ்சக்கயிறு = சடம்பு )
ஈடற்ற அழகென்று புறத்தளவில் மனமகிழ்ந்து
புடமிட்ட சொண்ணம் என மறு பாலை புகழ்ந்துதிர்த்து
உடலுரசும் கலைதன்னை கற்பனையாய் மனம்பதித்து
நடனமிடும் சொற்களின்றி நட்டுவாங்கம் அரங்கேற்றி
பாடமிலா எழுத்தாலே படம்போட்டு பா புனைன்ந்து
அடம்பிடித்து காதலிக்க தடம்பதிக்கும் பார்வைகள் !

முடமான சமுதாயம் நல்லெழுந்து நடந்துவிட
மடமைச் சிந்தனைகள் வேரறுந்து வீழ்ந்துவிட
கடமை உணர்ச்சிதனை எல்லோரும் உணர்ந்துவிட -- பொது
உடைமைக் கருத்துக்கு ஆதரவு பெருகிவிட
நாடும் மது நல் ஒழிந்து நாடுமது உயர்வுபெற
இடமளிக்கும் எழுத்துக்கு உடனில்லா நிலைமைகள் ---இவ்வெழுத்துக்கு
தடம்புரள மனமில்லை படம்போட தெரியலையே !!!

(யாரையும் புண்படுத்தும் புனைவு இதுவல்ல
விழிப்புனர்வுக்காகவே )

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Dec-15, 10:24 pm)
பார்வை : 71

மேலே