பிணி மருந்தும் அருள் வாக்கும் - - - சக்கரைவாசன்
பிணி மருந்தும் அருள்வாக்கும்
****************************************************
சல தோசம் கண்டுவிட சல தரத்தில் குறைசொல்லி
மலத்திலும் தோசமென மாவுத்திரை உண் என்பார் !
காலநேசம் மோசமென பரிகாரம் பலசொல்லி
மாளும்வழி காட்டிடுவார் குறி பார்க்கும் செம்மல்கள் -- நல்
சால வழி செயலுறுதே பிணி மருந்தும் அருள்வாக்கும்!!