தேன்தமிழ்

தமிழ் தமிழ் தமிழ்
அமிழ்து அமிழ்து அமிழ்து
இனிது இனிது இனிது
எம்தமிழ் செந்தமிழ்

ஆரா அருந்தமிழ்
அன்னைப் பேசு தமிழ்
பேரானந்தத் தமிழ்
பெருந்தமிழ் பைந்தமிழ்

வாரா இன்பத்தமிழ்
வளர்தமிழ் வாழ்தமிழ்
தேராய் படர் தமிழ்
தெவிட்டாத தேன் தமிழ்

முதுபெரும் காலத் தமிழ்
முத்தமிழ் முதற்றமிழ்
எளிமைத்தமிழ் இனியதமிழ்
குளிர்மைத்தமிழ் குன்றாத்தமிழ்

இசைத்தமிழ் இயற்றமிழ்
இளந்தமிழ் இறவாத்தமிழ்
உயர்தமிழ் உவகைத்தமிழ்
உன்னதத்தின் நிறைதமிழ்

கருத்திலே வன்றமிழ்
காலத்தை வென்ற தமிழ்
பெருமைத்தமிழ் பேரின்பத்தமிழ்
பொருந்திய நற்றமிழ்

சிறப்புத்தமிழ் சீரிய தமிழ்
பிறப்பில் தமிழ் பிறளாத தமிழ்
வளர் தமிழ் வாழ் தமிழ்
வசந்தத்தமிழ் வையகத் தமிழ்

தீந்தமிழ் தீதற்ற தமிழ்
உவப்புத்தமிழ் உண்மைத்தமிழ்
அழிவற்ற தமிழ் ஆதித்தமிழ்
ஆழித்தமிழ் மேழித்தமிழ்

கன்னித்தமிழ் கருக்கொள் தமிழ்
எண்ணத்தமிழ் ஏணித்தமிழ்
உலகத்தமிழ் உலவும் தமிழ்
உணர்வுத்தமிழ் என் உயிர்த்தமிழ் .

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Dec-15, 9:33 pm)
பார்வை : 8676

மேலே