நிறைகண்டு வாழ்ந்திட --- - - சக்கரைவாசன்
நிறை கண்டு வாழ்ந்திட ......
*******************************************************
பிறைவளர் சடையானை முறையான உன் தவத்தால் மகிழ்வித்த என் பிரம்மனே
நரை ஒன்று கண்டதும் வயதாகிப் போனநிலை மாந்தர்க்கு உரைப்பவனே
சுரைப்பிஞ்சு அதனுள்ளே மீண்டுமது முளைத்தற்க்கு விதையொன்று வைத்தவனே
நிறைகண்டு வாழ்ந்திட சென்னைவாழ் மக்களின் விதிதன்னை மாற்றிவிடு !