தமிழன்னை சிலை அழுகிறது - கற்குவேல் பா
![](https://eluthu.com/images/loading.gif)
சங்கம் அமைத்து
தமிழ் வளர்த்த மதுரையில் ,
தமிழன்னை
சிலையருகே நின்றுகொண்டு ;
தமிழில்
வழி கேட்கும் ஒருவனுக்கு ,
" கோ ரைட் டேக் லெப்ட் " என்று
ஆங்கிலத்தில் பதிலளிக்கிறாய் ..
நீ கூறிய வழி
சரியே ஆனாலும் ,
அய்யராகவே தோன்றுகிறது ..
தமிழ் விழுகிறது ,
தமிழன்னை சிலை அழுகிறது !!
#கற்குவேல்_பா