நாள்
கங்குலின் கறை நீங்கி
கதிரவன் கனல் கொழிக்கும்
காரோடும் ககனமெல்லாம்
கனலவன் கதிர் நிறைக்கும்
உலகமதன் உச்சியிலே
உதையவன் நிலை கொள்வான்
உழைத்துக் களைத்த உழவர் மனதில்
உதிரும் வேர்வை பார்ப்பான்
மன்னவன் மறைந்த பின்பு
மாதேவி வருவாள்
மங்குலின் மகாராணி
மண்ணுலகை மீட்பாள்