கடவுள்

கண்ணில் கண்ணீர் துளிரும் போது
கடவுள் துடைக்கிறார்
கருத்தில் கோபம் கனலும் போது
கடவுள் கரைக்கின்றார்
முகத்தில் புன்னகை மலரும்போது
முதல்வன் சிரிக்கின்றார்
முழுதும் ஆணவம் அழியும்போது
முத்தியை அளிக்கின்றார்
இனங்கள் ஒன்றாய் இணங்கும்போது
இறைவன் மலர்கின்றார்
இங்கிதம் மனிதன் பழகும்போது
இனியவன் வளம்தருவர்
ஆழமான பக்தர் மனதில்
ஆண்டவன் வாழ்கின்றார்
ஆசாபாசம் அறியா மனதில்
ஆதவன் உதிக்கின்றார்

எழுதியவர் : கனவரசன் (17-Dec-15, 3:11 pm)
Tanglish : kadavul
பார்வை : 92

மேலே