தொடரும் கஜல் - ஜின்னா வுனக்குச் ஜெயம்

தொடராய் தினமும் சுகமாக வந்துக்
கடலெனப் பொங்கும் கஜல் .

எழுத்து தளத்தினில் எங்கும் ஒலித்து
விழுதாய்ப் பரவும் விருந்து .

கனத்த இதயத்தின் காதல் வலியை
மனத்துள் பொழியும் மழை .

பகிர்வுடன் புள்ளிகளும் பார்வையுங் கண்டே
மகிழும் அகமும் மலர்ந்து .

கருத்து மழையால் களிப்பு மிகுமே
விரும்பும் வகையோ வியப்பு !

சோகமிழை யோடும் சுகமான கானமே
தேகவதை செய்யுந் திகைப்பு !

நினைவுகளில் என்றென்றும் நீங்காமல் நின்று
முனைவரா யாக்கிடு மோ ?

பாடிட வைத்திடும் பாவலர் ஜின்னாவைத்
தேடி வருமே சிறப்பு .

ஆங்கில மாற்றம் அமைப்பார் கருணாவும்
ஈங்கிதுவே யின்பம் இவர்க்கு.

நன்றி நவில்கின்றோம் நாங்க ளனைவரும்
ஜின்னா வுனக்குச் ஜெயம் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Dec-15, 4:29 pm)
பார்வை : 106

மேலே