ஆ.தேவதாஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஆ.தேவதாஸ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Dec-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 3 |
அப்பா, உங்க அப்பா எங்க?
என் மகன் கேள்விக்கு
நிலா காட்டினேன் நான்.
நான் தொட முடியா
தூரத்தில் சென்றதால்...
கனவில் வந்து
இரவில் மட்டுமே
என்னுடன் இருப்பதால்...
இருள் எனை சூழ்ந்து
நான் இடரிடும்போது
ஒளி கொடுத்து
வழி வகுப்பதால்...
அப்பா எங்களுக்காக
மட்டுமில்லாமல்
எல்லோருக்காகவும் இருந்ததால்...
சந்திரனைப்போல
இதமானவர் என்பதால்....
அவரணைப்பு
நிலவணைப்புக்கு
நிகரானது என்பதால்....
நிலா காட்டினேன்.
இரவில் மட்டும்
வாழ்கிறேன் அவரோடு,
நிலவாய் கலந்தார் என்னோடு.
(என் மனைவியை பிரிந்து வெளி நாட்டில் தனியாக இருந்த பொழுதுகளில் அவளின் நினைவாக எழுதிய கவிதை)
உள்ளங்கையை சுட்டுக் கொண்டேன்
ஆம்
சமைக்கும்போது.
உள்ளாடையை மாற்றி போட்டுக் கொண்டேன்
ஏன்
என கேட்க யாரு.
உப்பில்லாமல் உணவை உண்டேன்
நா
சுவை மறந்தபோது.
இப்படி
சின்ன சின்ன மறதிகள்
காரணம்
எப்போதும் உன் நினைவுகள்
மறதிகளோடு சில நாட்கள் நகரலாம்
உன் நினைவை மறந்தால்
எனை நால்வர் தூக்கலாம்
ஆம்,
நான் மரணிக்கலாம்.
(நான் என் மனைவியை பிரிந்து ஐரோப்பா கண்டத்தில் வசித்த இரண்டு மாதங்களில் தனிமையில் அவளின் நினைவாக எழுதிய கவிதை)
பூமி பந்தை சீக்கிரமாக
சுற்றச் சொல்லி கேட்டேன்
என் பூவே உன்னை சக்கரமாக
சுற்றிக் கொள்ள வருவேன்
பல ஆயிரம் மைல்கள் தூரம்
சொல்ல முடியா பாரம்
உன் சிந்தும் புன்னகை பேச்சில்
தூள் தூளாய் போகும்
இந்த வருட காலண்டரில்
இரு மாதங்கள் காணோம் - நாம் இருவரும்
இரு மாதங்களில்
இல்லை என இறந்தே போனோம்
நீ ஆசிய கண்டத்தில்
நான் ஐரோப்பா கண்டத்தில்
நாடு நகரம் கண்டம் கடந்து - நாம் படும் பாடு
எரியும் எண்ணெய் கிண்ணத்தில்
கடன் கடன் என பயந்து
பணம் பணம் என தேடி - உனை
தினம் தினம் நான்