நிலவாய் கலந்தார்

அப்பா, உங்க அப்பா எங்க?
என் மகன் கேள்விக்கு
நிலா காட்டினேன் நான்.
நான் தொட முடியா
தூரத்தில் சென்றதால்...
கனவில் வந்து
இரவில் மட்டுமே
என்னுடன் இருப்பதால்...
இருள் எனை சூழ்ந்து
நான் இடரிடும்போது
ஒளி கொடுத்து
வழி வகுப்பதால்...
அப்பா எங்களுக்காக
மட்டுமில்லாமல்
எல்லோருக்காகவும் இருந்ததால்...
சந்திரனைப்போல
இதமானவர் என்பதால்....
அவரணைப்பு
நிலவணைப்புக்கு
நிகரானது என்பதால்....
நிலா காட்டினேன்.
இரவில் மட்டும்
வாழ்கிறேன் அவரோடு,
நிலவாய் கலந்தார் என்னோடு.