நான் மரணிக்கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
(என் மனைவியை பிரிந்து வெளி நாட்டில் தனியாக இருந்த பொழுதுகளில் அவளின் நினைவாக எழுதிய கவிதை)
உள்ளங்கையை சுட்டுக் கொண்டேன்
ஆம்
சமைக்கும்போது.
உள்ளாடையை மாற்றி போட்டுக் கொண்டேன்
ஏன்
என கேட்க யாரு.
உப்பில்லாமல் உணவை உண்டேன்
நா
சுவை மறந்தபோது.
இப்படி
சின்ன சின்ன மறதிகள்
காரணம்
எப்போதும் உன் நினைவுகள்
மறதிகளோடு சில நாட்கள் நகரலாம்
உன் நினைவை மறந்தால்
எனை நால்வர் தூக்கலாம்
ஆம்,
நான் மரணிக்கலாம்.