ஜீவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜீவி |
இடம் | : aranthangi |
பிறந்த தேதி | : 12-Jun-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 309 |
புள்ளி | : 8 |
மெட்டுக்கு பாடினார்கள்
துட்டுக்கு பாடினார்கள்
கைதட்டுக்கு பாடினார்கள்
அவன்பாட்டுக்கு பாடிகொண்டிருந்தான்
அனைத்துமே கிடைத்தது .
அவன் வாய் தமிழர்களின் தாய்
அவன் தாலாட்டு கேட்டு
உறக்கமல்ல கிறக்கம் வந்தது
அத்திக்காய் காய் காய்
அவன் வார்த்தைகள் கேட்டு சொக்குவாய்
எதுவும் பேசமுடியாமல் திக்குவாய்
எல்லோரும் வலை விரித்தால்
வெறும் மீன்கள்தான் விழும்
அவன் கலை விரித்தான்
விண்மீன்களே வந்து விழுந்தன
எல்லோரும் பார்த்த வானம்
எல்லோரும் பார்த்த மேகம்
எல்லோரும் வளர்த்த சோகம்
கண்ணதாசன் சொன்னால் எல்லாமே புதுசுதான்
அவன் பேனா முள்ளில் சிக்கிட
ஆசைப்பட்டு உச்சத்து நட்சத்திரங்கள்
ஊர்வலம் வந்த
கோயில் புறா
மசூதிக் காகம்
ஒரே வானம்.
புத்தக அலமாரி
சுத்தமாய் மறைத்து
கலர் டிவி.
உலக மொழிகளில்
திலகமொழி தமிழ்.
உச்சரிக்கும் போதே
உற்சாகம் பிறக்கும்.
எழுதிப்பார்க்கையில் ஏடுகள் மணக்கும்.
நேர்முனை
எதிர்முனை
இவற்றை இணைத்தால்
மின்சாரம் பிறக்குமாம்.
பேனா முனையிலிருந்து
பிறக்கும் மின்சாரம் தமிழ்.
நம் அன்னைத் தமிழில்
ஆண்டுக்கணக்காய் மூன்று தானா?
ஆட்சித்தமிழ் மட்டுமென்ன
ஆகாதா?
தமிழால் முடியும்
தமிழால் முடியாவிட்டால்
எதனால் முடியும்?
யாப்புத் தமிழில்
கோப்புகள் வரட்டும்.
சங்கத் தமிழ்
தொழிற்சங்கத் தமிழாகட்டும்
நீதித்துறை நிதித்துறை
பணியாளர் விதித்துறை
எல்லாத் துறைகளிலும்
வெல்லத் தமிழ் இடம் பெறட்டும்
மருந்துச் சீட்டுகள் தமிழில்
மதிப்பெண் அட