எண்ணதாசன்

மெட்டுக்கு பாடினார்கள்
துட்டுக்கு பாடினார்கள்
கைதட்டுக்கு பாடினார்கள்
அவன்பாட்டுக்கு பாடிகொண்டிருந்தான்
அனைத்துமே கிடைத்தது .
அவன் வாய் தமிழர்களின் தாய்
அவன் தாலாட்டு கேட்டு
உறக்கமல்ல கிறக்கம் வந்தது
அத்திக்காய் காய் காய்
அவன் வார்த்தைகள் கேட்டு சொக்குவாய்
எதுவும் பேசமுடியாமல் திக்குவாய்
எல்லோரும் வலை விரித்தால்
வெறும் மீன்கள்தான் விழும்
அவன் கலை விரித்தான்
விண்மீன்களே வந்து விழுந்தன
எல்லோரும் பார்த்த வானம்
எல்லோரும் பார்த்த மேகம்
எல்லோரும் வளர்த்த சோகம்
கண்ணதாசன் சொன்னால் எல்லாமே புதுசுதான்
அவன் பேனா முள்ளில் சிக்கிட
ஆசைப்பட்டு உச்சத்து நட்சத்திரங்கள்
ஊர்வலம் வந்தன
அவன் காலத்தில் எல்லாம்
திருமணம் நடத்த தேவையானவை நான்கு
1.மணமகன் 2.மணமகள் 3.தாலி 4.கண்ணதாசன் பாடல்
வாராய் என் தோழி வாராயோ
ஒலிக்காத மண்டபம் கண்டாயோ ?
கண்ணன் புல்லாங்குழல் வாசித்தான்
அவன் தாசன் மைகுழலாள்
வாசிக்க வைத்தான்

- ஜீவி

எழுதியவர் : ஜீவி (19-Jul-15, 10:42 am)
பார்வை : 113

மேலே