kaavya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kaavya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 241 |
புள்ளி | : 5 |
அசையா மரம்,
பறக்கும் பருந்து,
புல்லைத் திண்ணும் வரிக்குதிரை,
நீர் நிறைந்த ஆறு,
அதில் துள்ளிக்குதிக்கும் மீன்கள்,
கரையோரத்தில் ஒரு ஆமை,
பறக்கும் பட்டாம்பூச்சி ,
கொசுவை எட்டிப்பிடிக்கும் தவளை,இதை ரசித்த படியே எனது உறக்கம்.இது காடல்ல..சுவற்றில் வரைந்த ஒரு கற்பனை ஓவியம்.
குழல் இனிது, யாழ் இனிது என்பர்
என் சாத்வீகமானவளின்
குரல் கேளாதோர்;
கண்ணைச் சுருக்கும் சிரிப்பு;
மயக்கும் பேச்சு;
பொறாமை கொள்ள வைக்கும், தந்தையின் அன்பு;
நீங்கள் இருவரும்
பேசிக்
கொள்ளும்போது, என்வசம் நானில்லை;
இருண்ட மேகத்திலிருந்து கெட்டிமேளச் சத்தம்;
வெப்பபூமியிலிருந்து மண்வாசனை;
மயில்போல நடனமாடி உன்னை வரவேற்க வேண்டிய மனிதன்,
கூண்டுக்கிளியாய் ஆகிவிட்டான்;
என்று மாறுமோ இந்த நிலைமை...
என்னைச் சுற்றி என் அன்பானவர்கள் இருந்தும்,நான் தனிமையாகக் கருதுகிறேன்;
நாட்கள் ஓடுகிறதே தவிர, நீ என்னிடம் ஓடி வரவில்லை;
எனக்கு மட்டும் இரு சிறகுகள் இருந்தால், இக்கணமே உன்னைத் தேடி வந்திருப்பேன்;
நாட்கள் வாரங்களாகிறது, வாரங்கள் மாதங்களாகிறது;
ஆயினும் நீ வரவில்லை;
நீ மட்டும் என்ன?என்னை நினைத்துக் கொண்டுதான் இருப்பாய்;
என்னால்,எனக்காக அல்லவா நீ அங்கு வருந்துகிறாய் என்று நினைக்கும்போது இதயம் துடிக்கிறது;
ஆயினும் உன் அன்பினால் சிலிர்க்கிறது;
விதியை நினைத்து வருந்துகிறேன்;
என்னை சிரிக்க வைக்க, நீ செய்யும் லீலைகளை நினைக்கின்றேன்;
நீ செய்யும் குறும்புகளை நினைக்கின்றேன், நாட்களைக் கடத்த;
நீ
எங்கள் வீட்டின் குட்டி ஓவியனவன்;
துறுதுறு சுட்டிப் பையனவன்;
என் சமயலின் ரசிகனவன்;
உன் அறிவுப்பசியோ அதிகம்;
ஆனால் நான் அறியாததோ அதிகம்;
நீயோ, என்னை எல்லாம் தெரிந்தவளாக நம்புகிறாய்;
நானோ, உனக்கு விடையளிக்க அந்த கூகிளையே நம்புகிறேன்.