நினைவோ ஒரு பறவை

என்னைச் சுற்றி என் அன்பானவர்கள் இருந்தும்,நான் தனிமையாகக் கருதுகிறேன்;
நாட்கள் ஓடுகிறதே தவிர, நீ என்னிடம் ஓடி வரவில்லை;
எனக்கு மட்டும் இரு சிறகுகள் இருந்தால், இக்கணமே உன்னைத் தேடி வந்திருப்பேன்;
நாட்கள் வாரங்களாகிறது, வாரங்கள் மாதங்களாகிறது;
ஆயினும் நீ வரவில்லை;
நீ மட்டும் என்ன?என்னை நினைத்துக் கொண்டுதான் இருப்பாய்;
என்னால்,எனக்காக அல்லவா நீ அங்கு வருந்துகிறாய் என்று நினைக்கும்போது இதயம் துடிக்கிறது;
ஆயினும் உன் அன்பினால் சிலிர்க்கிறது;
விதியை நினைத்து வருந்துகிறேன்;
என்னை சிரிக்க வைக்க, நீ செய்யும் லீலைகளை நினைக்கின்றேன்;
நீ செய்யும் குறும்புகளை நினைக்கின்றேன், நாட்களைக் கடத்த;
நீ விரைவில் வருவாய் என காத்துக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : காவ்யா (19-Jul-20, 1:45 pm)
சேர்த்தது : kaavya
Tanglish : ninaivo oru paravai
பார்வை : 487

மேலே