நம்பிக்கைதான் வாழ்க்கை
எங்கள் வீட்டின் குட்டி ஓவியனவன்;
துறுதுறு சுட்டிப் பையனவன்;
என் சமயலின் ரசிகனவன்;
உன் அறிவுப்பசியோ அதிகம்;
ஆனால் நான் அறியாததோ அதிகம்;
நீயோ, என்னை எல்லாம் தெரிந்தவளாக நம்புகிறாய்;
நானோ, உனக்கு விடையளிக்க அந்த கூகிளையே நம்புகிறேன்.