krishnak76 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : krishnak76 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 4 |
.எத்தனை பட்டங்கள்
காற்றோடு கலந்தாடின
இளம் வயதுகளில்.
கரம் பற்றிய நூல்கொண்டு
லாவகமாய் உயர்த்தி
இங்குமங்கும் அலைந்தாலும்
கட்டுக்குள் வைத்து
வானில் ஜாலங்கள் காட்டிய
வண்ண நிமிடங்கள்
மனம் மகிழ்ச்சியில்
மூழ்கிவிடும்.
நூலறுந்து போனாலோ?
கைநழுவி போன
பட்டம் - கூடவே
துயரத்தில் தவிக்கவிடும்
வாழ்க்கை கனவுகளும்
பட்டங்கள் போல்தாம்
சாதிக்கத் துடிக்கும்
நெஞ்சுறுதியும்,
நம்பிக்கையுமே நூலாகும்.
இரண்டும் இழந்துவிட்டால்
காற்றோடு காணாமல்
போன பட்டங்களாய்
கலைந்து,கரைந்துவிட்ட
கனவுகள்.
முடிவுக்காக மட்டுமே
புள்ளிகள் எப்பொழுதும்
வைக்கப்படுவதில்லை
சில சமயங்களில்
ஆரம்பத்தின் அடித்தளமாகின்றன -
கோலங்கள்.
பச்சை நிறம் கொண்டு
பாடுபட்டவன் மனதில்
பாலை வார்த்த
பயிர் நிலங்கள் இன்று
பாறைகளாய் வெடித்து
ஏர் பிடித்தவன் நெஞ்சை
எரியும் கொள்ளியாய்
எரித்து கொண்டிருக்கிறது
வீணான வட்ட மேஜை
பேச்சுகளும்
வார்த்தை ஜால
வோட்டு அரசியலும்
நீதிமன்ற தீர்ப்புகளும்
நடுவர் மன்ற ஆணைகளும்
பலனேதுமின்றி
பல விவசாய குடும்பங்களை
வேரோடு சாய்த்துவிட்டன
கரை புரண்ட நதிகளிலும்
கண்மாய்களிலும்
கண்ட நீரை
பத்து ரூபாய் பாட்டிலில்
பருகிட வைத்தது தான்
காலத்தின் கோலம்
ஓவ்வொருவர் உணவிலும்
உழைத்தவன் வேர்வையின்
உப்பும் கலந்தது
உண்மையென்றால்
ஆராய்ந்து அவலங்கள்
நீக்க வேண்டும்
விளை நிலங்கள் மீட்டு
விட்டுக்கொடுத்து
வ
பலவாராய் தூற்றி புறம் பேசும்
பேடி மாந்தர்கிடையில்
படும் பாட்டை விவரிக்க
ஏது வார்த்தை?
அடுத்தவர் அழுக்கை
அழகாய் ஏசும்
ஐயா கணவாண்களே
பிறர் வாக்கின்
துணை கொண்டு
உம் பின்னே பாரும்
முதுகை மூடிய
அழுக்கு அகலமாய்
தெரியும்.
மற்றவர் எச்சம் மட்டுமல்ல
உன் மலம்
உனக்கும் நாறும்