விவசாயம்
பச்சை நிறம் கொண்டு
பாடுபட்டவன் மனதில்
பாலை வார்த்த
பயிர் நிலங்கள் இன்று
பாறைகளாய் வெடித்து
ஏர் பிடித்தவன் நெஞ்சை
எரியும் கொள்ளியாய்
எரித்து கொண்டிருக்கிறது
வீணான வட்ட மேஜை
பேச்சுகளும்
வார்த்தை ஜால
வோட்டு அரசியலும்
நீதிமன்ற தீர்ப்புகளும்
நடுவர் மன்ற ஆணைகளும்
பலனேதுமின்றி
பல விவசாய குடும்பங்களை
வேரோடு சாய்த்துவிட்டன
கரை புரண்ட நதிகளிலும்
கண்மாய்களிலும்
கண்ட நீரை
பத்து ரூபாய் பாட்டிலில்
பருகிட வைத்தது தான்
காலத்தின் கோலம்
ஓவ்வொருவர் உணவிலும்
உழைத்தவன் வேர்வையின்
உப்பும் கலந்தது
உண்மையென்றால்
ஆராய்ந்து அவலங்கள்
நீக்க வேண்டும்
விளை நிலங்கள் மீட்டு
விட்டுக்கொடுத்து
வேண்டும் நீர் பெற்று
விவசாயம் காக்க வேண்டும்
இல்லையேல்
இப்பொழுதே
ஒர் வழி கண்டு பிடிக்க
மருத்துவ உலகிற்கு
சொல்லி வையுங்கள்
மீத்தேன் வாய்வு அருந்தி
மனிதன் உயிர் வாழ