நக்ச்சற்ற - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நக்ச்சற்ற
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jul-2015
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  2

என் படைப்புகள்
நக்ச்சற்ற செய்திகள்
நக்ச்சற்ற - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2016 5:37 pm

குழலிலே இசையானாய் கண்ணா
அலையிலே துயிலானாய் கண்ணா
சலங்கையிலே ஆடலானாய் கண்ணா
தென்றலிலே சுகமானாய் கண்ணா
மழையிலே தண்ணானாய் கண்ணா
தீயிலே ஒளியானாய் கண்ணா
விண்ணிலே ஒலியானாய் கண்ணா
மண்ணிலே உயிரானாய் கண்ணா
வேதத்தின் பொருளானாய் கண்ணா
பார்தனுக்குச் சாரதியானாய் கண்ணா
பாவையரின் கனவானாய் கண்ணா
தேவகியின் தவமானாய் கண்ணா
யசோதையின் நிதியானாய் கண்ணா
கம்சனின் இறுதியானாய் கண்ணா
கீதையின் நாயகனானாய் கண்ணா
காக்கும் கடவுளானாய் கண்ணா
காத்திருக்கிறோம் கண்ணா
காப்பாற்ற வா
லஞ்சமெனும் பூதகியை
அஞ்சிடாமல் அழிக்கா வா
ஊழலெனும் காளிங்கன் மேல்
ஊழிக்கூத்து ஆட வா
மற்றும் ஒரு கீதை பாடி வா
கற்றும் அறியா பாமரனை

மேலும்

இந்த வருடத்தின் சிறப்பான கவிதை எனலாம் . லஞ்சமெனும் பூதகியை அஞ்சிடாமல் அழிக்கா வா ஊழலெனும் காளிங்கன் மேல் ஊழிக்கூத்து ஆட வா மற்றும் ஒரு கீதை பாடி வா கற்றும் அறியா பாமரனை திருத்தி ஆட்கொள்ள வா ----அருமையான வரிகள் இந்தியா என்று சொல்லாமல் பாரதியின் வழியில் பாரதம் என்று சொல்லியதற்கு உங்களை சிறப்பாக பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள் கவிப்பிரிய மகா அன்புடன், கவின் சாரலன் 02-Jun-2016 9:00 am
மானிடம் என்றும் நிலையான வாழ வேண்டியது மண்ணில் அதனை இன்று பலர் தொலைத்து விட்டு உள்ளத்தை வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 6:09 am
நக்ச்சற்ற - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 2:06 pm

நம்பிக்கை கொள் தோழா..!

நம்பிக்கை கொள்….

உன் உறுதியான உணர்வுகளில்

உன்னத உழைப்பில்

அரிய சிந்தனையில்

உயர்ந்த இலட்சியத்தில்

திடமான நம்பிக்கையில்

நம்பிக்கை கொள் தோழா..!

நம்பிக்கை கொள்….



உன் உறுதியான உணர்வுகள்

ஆயிரம் அஸ்திவாரத்திற்கு சமம்..

அதன் மேல் எழுப்பும் உனது

இலட்சியக் கனவுகள்

நிச்சயமாக நிறைவேறும்..

ஐயமேதும் இல்லை..!



நம்பிக்கையோடு

உழைப்பையும் சேர்த்துக்கொள்..

உலகு உன் வசம் - ஆம்

அதனால் தான் அன்று

வான வெளியும்

நம் வசமானது

நிலவையும் தொட்டுப் பார்த்தோம்..

உலகையே நம்

உள்ளங்கைக்குள் பிடித்தோம்..



உன் அரிய சிந்தனையில

மேலும்

கம்பீரமான வரிகள்..எமது முயற்சிகள் என்றும் முடியாது என்று மூலையில் ஒளிகிறதோ அன்று தான் நாம் ஆயிரம் தோல்விகள் கடந்த போதிலும் உண்மையாக வாழ்க்கையை தொலைக்கிறோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 6:15 am
நக்ச்சற்ற - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 3:38 pm

நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது, கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவேயில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் ராமேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்னதுண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.

திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்:

‘திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கு

மேலும்

கருத்துகள்

மேலே