உழைப்பே உயர்வு

நம்பிக்கை கொள் தோழா..!

நம்பிக்கை கொள்….

உன் உறுதியான உணர்வுகளில்

உன்னத உழைப்பில்

அரிய சிந்தனையில்

உயர்ந்த இலட்சியத்தில்

திடமான நம்பிக்கையில்

நம்பிக்கை கொள் தோழா..!

நம்பிக்கை கொள்….



உன் உறுதியான உணர்வுகள்

ஆயிரம் அஸ்திவாரத்திற்கு சமம்..

அதன் மேல் எழுப்பும் உனது

இலட்சியக் கனவுகள்

நிச்சயமாக நிறைவேறும்..

ஐயமேதும் இல்லை..!



நம்பிக்கையோடு

உழைப்பையும் சேர்த்துக்கொள்..

உலகு உன் வசம் - ஆம்

அதனால் தான் அன்று

வான வெளியும்

நம் வசமானது

நிலவையும் தொட்டுப் பார்த்தோம்..

உலகையே நம்

உள்ளங்கைக்குள் பிடித்தோம்..



உன் அரிய சிந்தனையில்

ஆயிரம் ஆயிரம்

சாதனை முத்துக்கள்

பொதிந்துள்ளன.. ஆனால்

சிந்திக்காமல் இருப்பது

உன் தவறு ….

கண்டும் காணாதது

போல் இருப்பது

உன் தவறு..

சிந்தி.. ஓய்வில்லாமல் சிந்தி..!

உன் வெற்றிகரமான வாழ்விற்கு

ஆயிரம் வழிகள் பிறக்கும்..



உன் உயர்ந்த இலட்சியத்தை

இமைபோதும் மறந்திடாதே

உறுதியான உணர்வோடு

உன்னத உழைப்போடு

உன் அரிய சிந்தனைகளோடு

வாழ்வில் வெற்றி பெறுவாயாக..!

எழுதியவர் : மஹா (6-May-16, 2:06 pm)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 3428

மேலே