புதியதோர் உலகம் செய்வோம் ☺
இன்னும் ஒரு முறை
பாரதி பிறந்து வர வேண்டும்
ஆணாதிக்கம் மிகுந்த
உலகை சீர்திருத்த.....
பெண்களை
பகடைக்காய்களாய்
நினைப்பவரை
காறி உமிழ.....
உன்னால் என்ன
செய்ய முடியும்
என்று ஏளனம்
பேசுபவரை
எள்ளி நகையாட.....
பொறுத்தது போதும்
பெண்ணே!
பொங்கியெழு.
புதியதோர் விதி
மட்டுமல்ல...
புதியதோர் உலகத்தையே
படைத்திடுவோம்☺.