கார்த்திகேயன் க - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திகேயன் க |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Apr-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 5 |
வெட்டியெடுத்த பின்
கற்குவியல்
மீதி மலை
சுடுநீர் அனலாடும்
மணலாறு
கை விரித்து நிற்கும்
எலும்புக்கூடு மரங்கள்
நெடுஞ்சாலை
பெயர்ப் பலகையில்
அமர்ந்திருக்கும்
ஒற்றை காகம்
உரக்க கத்தியது
பருவ நிலை மாறுமென்று.
ஆவணி மாதத்து
பெருமழை நாளின்
நள்ளிரவில் பிறந்தவள்
பெரிய பேத்தி
பனிக்கடலை விதைத்த
மார்கழி பனியின்
அதிகாலை பிறந்தாள்
தீட்சண்யா
கொம்பாலே பயமுறுத்தும்
செவலை காளைக்கும்
தருணுக்கும் ஒரே வயது
குலதெய்வத்துக்கு
கொடை கொடுத்த
ஆடி வெள்ளியில்
பிறந்தாள் தேவி
மிகச்சரியாக ஞாயபகம்
வைத்து வாழ்த்துவாள்
தான் பிறந்ததினம்
அறியாத அம்மா...
நாய்க்குட்டி வாங்கும் ஆசை
வெறியாகிப் போனது
"காக்கா முட்டை" பார்த்தபிறகுதான்
மனிதர்களுக்கு மட்டுமே
அனுமதியிருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
சாத்தியமில்லையென்ற
அம்மாவின் அதட்டலில்
அக்கா நாய்க்குட்டியாகவும்
தீட்சண்யா எஜமானியாகவும்
பின்னே மாறியும்
விளையாட தொடங்கினார்கள்
அகத்தூய்மை பேசித்திரியும்
ஊர் முழுமையும்
எங்கெங்கு காணினும்
குப்பை