தலைகீழ் மாற்றம்

வெட்டியெடுத்த பின்
கற்குவியல்
மீதி மலை
சுடுநீர் அனலாடும்
மணலாறு
கை விரித்து நிற்கும்
எலும்புக்கூடு மரங்கள்
நெடுஞ்சாலை
பெயர்ப் பலகையில்
அமர்ந்திருக்கும்
ஒற்றை காகம்
உரக்க கத்தியது
பருவ நிலை மாறுமென்று.

எழுதியவர் : கார்த்திகேயன் (5-Jun-19, 9:39 am)
சேர்த்தது : கார்த்திகேயன் க
Tanglish : thalaigeel maatram
பார்வை : 134

மேலே